இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் தலை தீபாவளி கொண்டாட்டம்...!! ரசிகர்கள் மகிழ்ச்சி...!! வை ரல் வீடியோ...!!

இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் தலை தீபாவளி கொண்டாட்டம்…!! ரசிகர்கள் மகிழ்ச்சி…!! வை ரல் வீடியோ…!!

General News

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் நீண்ட காலங்களாக நம்பர் 1 நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.  இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு திரைத் துறையினர் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

திருமணம் முடிந்து தற்போது 4 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா தாயாகியுள்ளார். இது எப்படி சாத்தியம் என யோசித்து வந்த நிலையில் இவர் வாடகை தாய் மூலம்  குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த குழந்தைகளின் கால்களை பிடித்தபடி விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கால்களுக்கு முத்தமிட்டபடி புகைப்படத்தினை வெளியிட்டனர்.

அந்த இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடியுள்ளனர். அதோடு அணைத்து ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *