சுப்ரமணியன் கருப்பையா அவரது மேடைப் பெயரான கவுண்டமணியால் அறியப்படுகிறார், ஒரு இந்திய நடிகர் மற்றும் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். சக நடிகர் செந்திலுடன் தமிழ் திரைப்படங்களில் காமிக் இரட்டையர் கூட்டணிக்காக அறியப்பட்டவர். இந்த ஜோடி 1980கள் மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக ஆதிக்கம் செலுத்தியது.
அவருக்கு 1963 இல் சாந்தி என்பவருடன் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். சத்யராஜ் – கவுண்டமணி ஜோடியின் காமெடி இன்றளவும் மறக்க முடியாது. இவர்கள் இருவருமே இணைந்து நடித்த பல்வேறு படங்களின் காமெடிகள் மாபெரும் வெற்றியடைந்தது. இதனாலேயே சத்யராஜ் தன்னுடைய பெரும்பாலான படங்களில் கவுண்டமணியை தனது காமெடி ஜோடியாக கமிட் செய்து விடுவார்.
சினிமாவையும் தாண்டி இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் தான். அப்படி பல வெற்றி படங்களில் ஒன்றாக வெளியானது தான் மகுடம், இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் என இருவரும் சேர்ந்து கலக்கி இருப்பார்கள், இந்த படத்தில் கவுண்டமணிக்கு நடிகை சரோஜா தேவியின் புகை படத்தை கட்டி தனது தங்கச்சி அழகுமணியை செந்தில் திருமணம் செய்து வைத்து விடுவார், அந்த காட்சிகள் எல்லாம் இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்கலாம்.
இவரின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இருக்கிறது. 43வயதிளும் இன்னும் அழகாவே தான் இருக்கிறார் அந்த அழகுமணி, உண்மையிலேயே அவரின் பெயர் அழகுமணி தான், டீச்சராக பணியாற்றி வந்த அவர் இப்ப்போது எந்த வேலைக்கும் செல்லாமல் தனது குடும்பத்துடன் ஜாலியாக பொழுதினை கழித்து வருகிறார், மகுடம் திரைபடத்தின் இயக்குனர் இவருக்கு சொந்தம் என்பதால் இவரை அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். அதற்கு பிறகு சினிமா பக்கம் கூட இவர் செல்லவே இல்லை. இதோ அவரின் இப்போதைய போட்டோ.