விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமார் ஜோடிகளின் திருமணம் இன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் நடந்து முடிந்துள்ளது. இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சாந்த மாமா, பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் டீசல் திரைப்படத்தை நடித்து முடித்து இருக்கிறார் .இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இருக்கிறது. இவர் திரைத்துறையில் இருந்த போதும் தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் நடக்கும் என்று முன்பே கூறியிருந்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் வைல்ட் கார்ட் கண்டஸ்டண்டாக உள்ளே வந்த ஹரிஷ் கல்யாண், இரண்டாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். தற்போது இவர் திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.
தன்னுடைய வருங்கால மனைவியின் புகைப்படத்தை கடந்த மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் இன்ப அ தி ர் ச்சி கொடுத்திருந்தார். இது ஒரு நிச்சயப்படுத்தப்பட்ட திருமணம் அவர் பெயர் நர்மதா உதயகுமார். நாங்கள் எங்கள் குடும்பத்திலுள்ள உறவினர்கள் மூலமாகத்தான் சந்தித்தோம். எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்திருந்த காரணத்தினால் ஒருவரை ஒருவர் விரும்பினோம். அப்படித்தான் எங்களின் இந்த பயணம் தொடங்கியது.
எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை துணை கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அதில் தனது திருமணத்தையும் வருங்கால மனைவியை பற்றி பதிவினை வெளியிட்டு இருந்தார். நேற்றைய தினம் நாளை தனது திருமணம் குறித்த செய்திகளை பத்திரிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தார். அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் திருமணத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வரும் ஹரிஷ் கல்யாணுக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். திடீரென இவருக்கு திருமணம் என்று கூறியவுடன் இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும் அனைவரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.