ஒரு சில முன்னணி டிவி நிறுவனங்களின் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து – ஸ்ரேயா. இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் என்னும் சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலம் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்.
தற்போது, நடிகர் சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடிக்கிறார். ஸ்ரேயா அஞ்சன் ஏற்கெனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட பிரபல முன்னணி சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள், தங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் ரசிகர்களுடன் அதிகம் பகிர்ந்துக் கொள்வார்கள்.
அத்தோடு ஒருவரும் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயாவை பின்தொடர்கின்றனர். சமீபத்தில் கூட MG காரின் டாப் மாடலை சீரியல் நடிகர் சித்து சுமார் 23 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தார். இதையும் அவரே வெளியிட்டுருந்தார். அதுமட்டுமில்லை சித்து ஸ்ரேயாவின் பிறந்த நாளை மாலைதீவில் கொண்டாட வைத்தார்.
சமீபத்தில் கூட இந்த ஜோடி தங்களது தல தீபாவளி கொண்டாடி இருந்தனர். அந்த புகைப்படங்கள் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருது சமீபத்தில் தீபாவளி முடிந்தவுடன் கிடைத்துள்ளது. fab stars iconic award 2022 சார்பில் இந்த விருது இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளனர்.