மஞ்சள் காமாலையால் திடீரென உயிரிழந்த பிரபல முன்னணி இளம் தமிழ் இசையமைப்பாளர்..!! அவர் யார் தெரியுமா..?? இவருக்கா இப்படி நடக்கணும் என கதறி அழும் ரசிகர்கள்..!! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!!

மஞ்சள் காமாலையால் திடீரென உயிரிழந்த பிரபல முன்னணி இளம் தமிழ் இசையமைப்பாளர்..!! அவர் யார் தெரியுமா..?? இவருக்கா இப்படி நடக்கணும் என கதறி அழும் ரசிகர்கள்..!! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!!

Cinema News Death News

தமிழ் சினிமாவின் தற்போது இளம் இசையமைப்பாளராக இருப்பவர் தான் ரகுராம். இவரை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். சென்னை, வட பழனியை சேர்ந்தவர் இசையமைப்பாளர் ரகுராம். 2017ல் சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் விதார்த் நடித்த, ‛ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஓரிரு படங்களுக்கு இசையமைத்தார்.

ஆல்பம் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். சத்திய சோதனை என்ற படத்திற்கு சமீபத்தில் இசையமைத்து வந்தார். திடீரென மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து உடல் நல பிரச்னையால் சென்னை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலையில் திடீரென உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *