பிரபல டிவியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் புகழ். இவரின் நடிப்புத் திறமையையும், காமெடியில் கலக்குவதையும் பார்த்து இவர் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
பல உச்ச நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் உண்மையான மிருகங்களுடன் நடந்து வருகிறது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்படி இல்லையெனில் அவரை ஒரு முறை நேரிலாவது பார்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் ஆசை என கூறியிருக்கிறார். இவரின் ஆசை நிறைவேறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.