நவரச நாயகனின் மகனுக்கு விரைவில் திருமணம்… காதலியை கரம் பிடிக்கிறாரா…? திருமணம் எப்போது தெரியுமா…?

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நவரச நாயகன் கார்த்திக்கின்  மகன் தான் கௌதம் கார்த்திக். இவர் தனது காதலியான மஞ்சுமா மோகனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சுமா மோகன்.

இவர் கடந்த 2019ம் ஆண்டு கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து தேவராட்டம் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இந்த விஷயம் இணையத்தில் கசிந்த வண்ணம் இருந்தது.

அதன் பிறகு இந்த ஆண்டு மஞ்சுமா மோகன் பிறந்த நாளன்று வாழ்த்துக்களோடு இருவருக்கும் இடையேயான காதலையும் வெளிப்படுத்தியிருந்தா கௌதம் கார்த்திக். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்திய பேட்டியொன்றில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

அதாவது திருமணம் எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு விரைவில் என நம்புகிறேன் என பதிலளித்திருக்கிறார். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில் நல்ல செய்தி கூடிய விரைவில் வரும் என ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Copyright manithan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *