நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
அதற்கான ஏற்பாடுகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது என கடந்த சில வாரங்களுக்கு முன்பே செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது டிசம்பர் 4ம் தேதி அவரது திருமணம் நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது. அவரது வருங்கால கணவர் பற்றிய விவரமும் வெளிவந்து இருக்கிறது. அவரது நீண்ட நாள் நண்பரும், பிஸ்னஸ் பார்ட்னருமான சோகேல் கதுரியா என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பை ஹன்சிகா விரைவில முறையாக வெளியிடுவார் என எ தி ர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.