பிரபல நடிகையுடனான காதலை உறுதி செய்த நடிகர் சித்தார்த்…!! எப்படி செய்திருக்கிறார் பாருங்க..!! அட பல பேரின் கனவு நாயகி தான் இவரது காதலியா..!! இவரா என ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். சித்தார்த்துடன் ஏற்கனவே சில நடிகைகளை இணைத்து கி சுகி சுக்கள் வெளியாகி மெல்ல மெல்ல அ ட ங்கியது. நடிகர் சித்தார்த் பெரும்பாலும் சமூகம் சார்ந்த பி ர ச் சனைகள் மற்றும் அரசியல் குறித்த கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்துபவர்.

அண்மையில் பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு சித்தார்த் பதிவிட்டிருந்தது இணையத்தில் பெரும் ப ரப ரப்பை கிளப்பியது.  ச மீப காலமாக நடிகை அதிதி ராவ் ஹைதரியுடன் சித்தார்த் காதலில் இருப்பதாக தகவல் ப ர வியது. இருவரும் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகவே பங்கேற்று வருகின்றனர். மும்பை தெருக்களில் நெருக்கமாக கைகோர்த்தபடி சுற்றிய புகைப்படங்களும் வெளியானது.

இருவரும் காதலிப்பதாக பலரும் பேசினர். ஆனாலும் இது சம்மந்தமான எந்த விளக்கத்தையும் அவர்கள் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் அதிதிராவ் ஹைதரி பிறந்த நாளையொட்டி அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து காதலிப்பது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி உள்ளது.

சித்தார்த் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”என் இதய ராஜகுமாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு தனது நெஞ்சில் அதிதிராவ் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இருவரும் மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதிதிராவ் ஹைதரி தமிழில் செக்கசிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா, காற்று வெளியிட ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *