தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக டாப் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா – நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
மருத்துவமனையில் நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை சமூக வலைத்தலங்களில் வெளியிட்ட நிலையில் அவருக்கு அனைவரும் ஆறுதல் கூறினர். நாகசைதன்யாவின் சகோதரர் முன்னாள் அண்ணியார் நலம் பெற வேண்டும் என்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரிடம் இருந்து ஆறுதல் வார்த்தைகள் வரும் என எதிர்பார்த்த நிலையில் நாக சைதன்யாவின் தம்பியைத் தவிர வேறு யாரும் எதுவும் பேசாமல்இருந்தனர்.
இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகர்ஜுனா, சமந்தாவை மருத்துவமனையில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றது. எனினும் இது பற்றி அவர் தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. நாகசைதன்யாவை சமந்தா பிரிந்தாலும் கூட ஏற்கனவே நாகர்ஜுனா சமந்தா என் மருமகள் இல்லை, மகள் மாதிரி என கூறியிருந்தார். ஏற்கனவே நாகசைதன்யா குடும்பத்தினர் மீண்டும் சமந்தாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால், நம்ம ஹீரோ நாக சைதன்யா இதற்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். முடிந்தது முடிந்தது தான் என கூறி விட்டாராம். இந்நிலையில் சமந்தாவுடன் நாகசைதன்யா சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் திடீரென நடிகை சமந்தா தன்னுடைய சோசியல் மீடியாவில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், எனக்கு Myositis என்னும் Autoimmune நோய் பாதிக்கப்பட்டு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதிலிருந்து குணமடைய எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. ஆனால், கூடிய விரைவில் நான் குணமடைந்து நலமுடன் திரும்புவேன் என்று யசோதா படத்திற்கு ட்ரிப்ஸ் ஏற்றி கொண்டே டப்பிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இந்த நிலையில் நாக சைத்னயாவின் சகோதரர் அகில் சமந்தாவின் இந்த பதிவில் ‘ ‘டியர் சாம் என குறிப்பிட்டு ‘நீங்கள் குணமாக உங்களுக்கு எல்லா அன்பும் வலிமையும் கிடைக்கும்’ என்று பதிவு செய்துள்ளார்.’ என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
— Samantha (@Samanthaprabhu2) October 29, 2022