வருங்கால கணவருடன் ரொமான்டிக்கான புகைப்படத்தை பதிவிட்ட மஞ்சிமா மோகன் வாஃவ் செம்ம கியூட்டான ஜோடி!! கண்ணு பட போகுது…!!

General News Image News

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை மஞ்சிமா மோகன். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் உடன் இணைந்து தேவராட்டம், விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் மற்றும் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரைப் போல கௌதம் கார்த்திக் கடந்த 2012ம் ஆண்டு வெளியான கடல் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து ரங்கூன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தற்பொழுது பத்து தல என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது தொடர்பான மஞ்சிமா மோகன் பதிவில், “மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போன போது நீ என் வாழ்வில் ஒரு காவல் தேவதை போல வந்தாய்.

வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்!! ஒவ்வொரு முறையும் நான் முழு குழப்பமாக இருந்த போது, நீ என்னை தெளிவடைய செய்தாய். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய்.நான் உன்னிடம் நேசிக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், நான் யார் என்பதற்காக நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதுதான்!

நீ எப்போதும் எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் இருப்பாய்” என மஞ்சிமா மோகன் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் சேர்ந்து எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *