பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் தன்னை இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக அறிமுகபடுத்திக் கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் ஆலியாபட்டுக்கும் ரன் பீர் சிங்குக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில் ரன்பீர் அடுத்த இரு தினங்களிலேயே சினிமா படப்பிடிப்பின் வேலைகளில் பி ஸியாகினார். அவரைப் போலவே ஆலியாவும் தன் பணிகளை தொடர்ந்தார். இதனை அடுத்து ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்ட ஆலியா ஜுன் மாதம் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்தார். இந்நிலையில் தற்போது வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தனக்கு குழந்தை பிறக்க தேதி கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவர்கள் பெற்றோராக உள்ளனர் என்ற தகவலை சமூக வலைத்தலங்களில் பதிவேற்றம் செய்தனர். ரன்பீர் கபூர் அவரது சமூக வலை தள பக்கத்தில் ’’விரைவில் எங்களுக்கு குழந்தை வரவுள்ளது’’ என்ற செய்தியை தெரிவித்தார். அக்டோபர் மாதம் கபூர் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ரன்பீர் கபூர் தாயார் நீட்டு கபூர், சகோதரி ரிதிம்மா கபூர், கரிஸ்மா கபூர், பாட்டி நெய்லா தேவி என அனைவரும் பங்கேற்றனர்.
ஆலியாவின் தாயார் சோனி ரஸ்தான் மற்றும் சாஹீன் பட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது சமூக வலைத்தலத்தில் வைரலானது. இந்நிலையில் இன்று காலை ஆலியாவுக்கு பி ரசவ வ லி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேரங்களிலேயே தங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று மதியம் 12.5க்கு குழந்தை பிறந்துள்ளது என அறிவித்து ஜோடியினர் தங்கள் குழந்தையை வரவேற்றுள்ளனர்.
இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தலங்களில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ச மீபத்தில் ஆலியா, ரன்பீர் இருவரும் சேர்ந்து நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியானது. இதில் அமித்தாப் பச்சனும் உள்ளார். நாகர்ஜுனா, மவுனி ராய் சிறிய கதாபாத்திரங்களல் நடித்துள்ளனர். விரைவில் ஆலியா பட் ஹாலிவுட் திரைப்படத்தில் களம் இறங்க உள்ளார். மற்றொரு பக்கம் ரன்பீர் ரஷ்மிகாவுடன் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ஷ்ரத்தா கபூருடன் லவ் ரஞ்சான் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளனர்.