க ர்ப்பமான ஜெனி…!! கோபியை ப ங் கமாக க லா ய்த்த ராமமூர்த்தி…!! மிகவும் க லக்கலான எபிசொட்…!! செம்ம ட் விஸ்ட்…!!

Cinema News

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான மக்களை கவர்ந்த சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஜெனி காலையில் எழுந்ததும் வாமிட் பண்ண, செழியன் என்னாச்சு சாப்பிட்டது எதுவும் ஒத்துக்களையா என கேட்டு, சரி நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன் என பாத்ரூமுக்குள் செல்ல அதற்குள் ஜெனி கீழே வந்து விடுகிறார். கிச்சனில் ஈஸ்வரி மற்றும் பாக்கியா இருக்க ஜெனி டல்லாக இருப்பதை பார்க்கும் ஈஸ்வரி என்னாச்சு என கேட்கிறார்.

காலையிலிருந்து ஒரே வாமிட்டா இருக்கு பாட்டி. ரெண்டு மூணு நாளா வாந்தி வர மாதிரியே இருந்தது என சொல்ல ஈஸ்வரி டேட் தள்ளிப் போய் இருக்கா என கேட்க ஆமாம் என கூறுகிறாள். பிறகு எல்லாம் நல்ல விஷயமாகத்தான் இருக்கும் என ஜெனியை ம ருத் துவமனைக்கு அழைத்துச் சென்று வர இரண்டு மாத கர்ப்பம் என்பது கன்ஃபார்ம் ஆகிறது. உடனே வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோஷப்பட கோபிநாத் அப்பா ராமமூர்த்தி ஸ்வீட் எடுத்துக் கொண்டு சென்று கோபி மற்றும் ராதிகாவுக்கு கொடுத்து நான் கொல்லு தாத்தாவாக போறேன், நீ தாத்தாவாக போற தாத்தா தாத்தா என கூறி இருவரையும் வெ றுப்பே த்துகிறார்.

பிறகு அவர் அங்கிருந்து வந்ததும் ராதிகாவிடம் கோபி என்ன பார்த்தா தாத்தா மாதிரியா இருக்கு என சொல்ல தாத்தான்றது கொஞ்சம் ஓவர் தான். சரி லட்டு சாப்பிட்டு, போய் மாவு வாங்கிட்டு வாங்க என சொல்ல என்னை தாத்தா என்று சொல்லாமல் சொல்லிட்டு போறாரு என கோபி பு ல ம்புகிறார். அடுத்து செழியன் ஆபீஸில் வர்ஷினி அமிர்தா மற்றும் தன்னுடைய நண்பன் என அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார்.

அடுத்த செழியன் ஆபீஸ் கிளம்ப அப்போது கோபி வந்து வீட்டு வாசலில் செழியனை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என பேசுகிறார். பதில் ஏதும் சொல்லாமல் செழியன் அமைதியாகவே இருக்கிறார். பிறகு கோபி ஜெனியிடம் என்னுடைய வாழ்த்தை சொன்னதாக சொல்லிடு என கூறி சில அறிவுரைகளை வழங்குகிறார். அடுத்து அப்புறம் மீட் பண்ணலாம் பாய் என சொல்லி கோபி கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *