சினிமாவில் வயதானவர்கள் எத்தனையோ பேர் நடித்திருந்தாலும் மிகக் குறைவான ஒரு சிலரையே நாம் நினைவில் வைத்திருக்கிறோம். அது போல இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கே. ஆர். ரங்கம்மாள் பாட்டி. இவர் சென்னை வடபழனி குமரன் காலனியில் வசித்து வந்தார். மேலும்,எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் இருந்து தற்போது இருக்கும் நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார்.
அதிலும் படத்தில் இவர் வடிவேலுடன் இணைந்து நிறைய காமெடி காட்சியில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த ஒரு திரைப்படத்தில், “போறது தான் போற ந்தா அந்த நாயக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ” என ஒரு பாட்டி சொல்லும் காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்.பல படங்களில் காமெடி ரோலில் நடித்த ரங்கம்மாள் பாட்டி சென்னை மெரினா பீச்சில் பிச்சை எடுக்கிறார் என தகவல் வந்தது.
ரங்கம்மாள் பாட்டியை அணுகி விசாரித்த போது, தான் பிச்சை எடுக்கவில்லை எனவும், சூட்டிங்கை தாண்டி சின்ன சின்ன பொருட்களை விற்று சம்பாதித்து வருவதாகவும் கூறினார். நடிகை ரங்கம்மாள் பாட்டிக்கு மொத்தம் 12 குழந்தைகள். 12 பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் இவ்வளவு பேர் இருந்தும் பாட்டியை பார்த்துக்கொள்ள ஒருவர் கூட முன்வரவில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார் ரங்கம்மா. அதனால் உழைத்து சாப்பிடுகிறேன் எனவும் கூறினார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவினால் கடந்த சில மாதங்களாக ரங்கம்மாள் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டியின் வறுமை நிலை ஊடகங்கள் மூலமாக தெரியவந்தது. வறுமையில் வாடி வந்த நிலையில் சினிமாத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நடிகர் சங்கத்தினர் உதவ வேண்டும் என ரங்கம்மாள் பாட்டி வலியுறுத்தி இருந்தார். அப்போது சினிமா துறையில் என்னுடன் நடிக்காத நடிகர்களே இல்லை.
போதுமான அளவு சினிமா துறையில் பெயர் எடுத்துள்ளேன். கடைசி காலத்தை இங்கேயே க ழி த்து விட உள்ளேன். தங்குவதற்கு ஒரு வீடு, சாப்பிடுவதற்கு உணவும் கிடைத்தால் போதும். அதற்கு யாராவது ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் ந லக்கு றைவினால் கடந்த சில மாதங்களாக ரங்கம்மாள் அ வ திப்பட்டு வந்தார். இந்நிலையில் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள வீட்டில் ரங்கம்மாள் உ யி ரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரங்கம்மாள் பாட்டியின், ஒரு மகளின் மகள் (பேத்தி) விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்துள்ளார். அவரது பெயர் த்ரிஷா அலெக்ஸ். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவின் தங்கையாக ரங்கம்மாள் பாட்டியின் பேத்தி த்ரிஷா அலெக்ஸ் நடித்துள்ளார். இந்த விஷயத்தை ரங்கம்மாள் பாட்டி தானாகவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வை ரலா கி வருகிறது.