கோடி கோடியாக பணம் இருந்தும் லதா மங்கேஷ்கர் இ று தி வரை திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா…? சிவாஜிக்கும் இவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவா…? உ ண்மைகளை உ டை த்த நடிகர் பிரபு!!

கோடி கோடியாக பணம் இருந்தும் லதா மங்கேஷ்கர் இ று தி வரை திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா…? சிவாஜிக்கும் இவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவா…? உ ண்மைகளை உ டை த்த நடிகர் பிரபு!!

Image News

நடிப்பு என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது  சிவாஜி கணேசன் தான். மக்கள் திலகம் சிவாஜி கணேஷனுக்காக பணம் வாங்காமல் பாட்டு பாடிய லதா மங்கேஷ்கரை நடிகர் பிரபு தற்போது நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் காலமானார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

1987-ம் ஆண்டு பிரபு நடித்து வெளியான  ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக பாடகி லதா மங்கேஷ்கரை தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடினார் லதா மங்கேஸ்கர். இது தான் அவர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல். இந்தப் பாடல் அவர்  பாடியதைக் குறித்த சுவாரஸ்யமான தகவலை பிரபல பத்திரிக்கையில் தெரிவித்திருக்கிறார் நடிகர் பிரபு.

அதில், எனது அண்ணன் ராம்குமார் தான் ஆனந்த் திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியே ஆக வேண்டுமென்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். லதா மங்கேஷ்கர் எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்து  ஆனந்த் படத்தில் ஆராரோ ஆராரோ என்ற பாடலைப் பாடிச் சென்றார். அந்தப் படத்தில் அப்பாடலைப் பாடியதற்காக அவர் சம்பளம் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

என் மூத்த அண்ணன் சிவாஜி கணேசனுக்காக பாடுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறி அப்பாடலை அவர் பணம் ஏதும் வாங்காமல் பாடிச் சென்றார். லதா மங்கேஷ்கரும் அவரது சகோதரிகளும் என் தந்தையின் தீவிரமான  ரசிகைகள். அவர்கள் என் தந்தையை அண்ணா என்றே அன்புடன் அழைத்தனர். லதா அவ்வப்போது எங்களுக்கு ஏதேனும் புகைப்படங்களை அனுப்பி வைப்பார். சில நேரங்களில் கடவுளின் புகைப்படங்களையும்  அனுப்பி வைப்பார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட எனக்கு சில புகைப்படங்களை அனுப்பினார். ஷீரடி குரு பாபா, எனது அப்பா என மாறி மாறி இவர்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்பார். எங்களின் அன்னை இல்ல வளாகத்தினுள் ஒரு சிறிய பங்களா இருக்கிறது. அதுதான் எங்களுக்கும் லதா மங்கேஷ்கருக்குமான இடையில் இருந்த உறவின் சாட்சி.

எப்போது சென்னை வந்தாலும் லதா மங்கேஷ்கர் தங்கிச் செல்வதற்காகவே அதைக் கட்டினார்கள். அப்பா இரண்டே மாதங்களில் அதைக் கட்டச் செய்தார். லதா மங்கேஷ்கருக்கு ஓட்டல் உணவு அவ்வளவாக பிடிக்காது. ஆகையால் அம்மாவே அவர் கையால் அவருக்கு உணவு சமைத்துக் கொடுப்பார்.

அப்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எல்லாம் இப்போது போல் அவ்வளவு சுலபமாகக் கிடைக்காது என்பதால் அம்மா அவர்களுக்காக தனியாக ஃப்ளாஸ்கில் சுடு தண்ணீர் கொடுத்து அனுப்புவார். லதாவும் பதிலுக்கு தீபாவளி போன்ற விழாக்காலங்களில் எங்கள் அனைவருக்கும் துணிகளும், பரிசுகளும் வாங்கி அனுப்புவார். கடந்த தீபாவளி வரை இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமீபத்தில் இணையதளத்தில் வெளியான செய்தியின் படி, லதா மங்கேஷ்கர் அவர்கள், முன்னாள் பிசிசிஐ தலைவர் ராஜ் சிங்கை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, அரச பரம்பரையைச் சேர்ந்த ராஜ் சிங் குடும்பத்தினர் இவர்கள் இருவரின் திருமணத்திற்கு சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், ராஜ் சிங், லதா மங்கேஷ்கரை திருமணம் செய்யவில்லை. அதே நேரத்தில் அவரும் வேறு எந்தப்  பெண்ணையும் திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறி, அப்படியே வாழ்ந்து காலமானார். அதேபோல், லதாமங்கேஷ்கரும் அவரின் நினைவாக கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

தனது கடைசி நிமிடம் வரை லதா மங்கேஷ்கரும், ராஜ் சிங்கும் நல்ல நண்பர்களாக மட்டுமே இருந்துள்ளனர். லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்ளாததற்கு இந்த சம்பவம்தான் காரணமாக இருக்கும் என அனைவரின் மத்தியிலும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *