விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தற்போதைய முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சி கிட்டத்தட்ட 5 சீசன்கள் ஒளிபரப்பாகி 6வைத்து சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் 6, 35 நாட்களை கடந்து மக்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் இந்த வாரம் ராம் அல்லது மகேஸ்வரி ஆகியோரில் இரண்டு பேர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகேஸ்வரி குறைந்த வாக்குகள் பெற்று வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து தற்போது நான்காவது போட்டியாளராக மகேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். மகேஸ்வரி ஒரு நாளைக்கு ரூ. 23 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகிறார் என எற்கனவே நமக்கு தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நடிகை மகேஸ்வரி சுமார் ரூ. 8 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.
2005 இல், மகேஸ்வரி சாணக்கியனை மணந்தார், இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது. பின்னர் 2010இல் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர் இந்நிகழ்ச்சிக்கு முன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்தார். இந்த படம் செம ஹிட் ஆனது. இந்நிலையில் இவர் பிக் பாஸிலிருந்து வெளியேறியது இவரது ரசிகர்களை கொஞ்சம் கவலையடைய செய்துள்ளது.