திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரை பிரிந்த பிரபல முன்னணி தமிழ் நடிகை..!! திருமண வாழ்க்கை அவர் அனுபவித்த கொடுமைகள் இத்தனையா..!! அவர் கதையை கேட்டால் கண்ணீர் வந்து விடும் போலயே..!!

Cinema News

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் வி.ஜே. மகேஸ்வரி. தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்டிமேட் மெகா ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து விஜய் சேதுபதியின் மனைவியாக இவர் நடித்திருந்தது அனைவரிடமும் குறிப்பிடத்தக்து. மேலும் இவருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனதால் தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்து அதிக தூரம் விலகியிருந்தார். அதன் பின் சில காரணங்களால் அவரின் கணவரை பிரிந்த மகேஸ்வரி தனியாக மகனை வளர்த்து வருகிறார்.

இதற்கிடையே சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் தனது கணவரை விவாகரத்தி செய்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். “எனக்கு திருமணமான ஒரு வருடத்திலே நாங்கள் பிரிந்துவிட்டோம். காரணம் என் மகனை வளர்க்க வேண்டும் என்ற பொறுப்பு வந்தது. அதோடு எனது கணவரும் அவரின் வீட்டில் இருந்தவர்களும் என்னை ஒரு அடிமை போல்நடத்தி வந்தார்கள். ஆண் நண்பர்கள் எவருடனும் பழக் கூடாது, சீரியல்களில் நடிக்க கூடாது என நிபந்தனைகளை விதித்தார்கள். எனது குடும்பத்தினருக்கு சிறு சிறு உதவிகள் கூட செய்ய விடவில்லை.

இதனால் எனது தாய் வீட்டு வேலைக்கு செல்லும் நிலைமைக்கு வந்தது. என்னை கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவை நான் எப்படி வீட்டு வேலைக்கு அனுப்ப முடியும். ஏன் எனக்கு மட்டும் சரியான வாழ்க்கை அமையவில்லை என பலமுறை வருத்தப்பட்டிருக்கிறேன். இந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் விடுபட தான் நான் விவாகரத்து என்ற ஒரு முடிவை எடுத்தேன். விவாகரத்திற்கு பின் நிம்மதியாக இருந்து வருகிறேன்” என பேசியிருக்கிறார் மகேஸ்வரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *