தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்து வருபவர் நடிகர் கவுண்டமணி. இவர் படத்தில் ஹீரோவைப் பற்றி பேசுகிறார்களோ, இல்லையோ இவரை பற்றியும் இவரின் காமெடி பற்றியும் தான் படத்தில் அதிகமாக பேசுவார்கள். அந்த அளவிற்கு படத்தில் இவரது காமெடி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் 1996ல் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், நக்மா, கவுண்டமணி உள்ளிட்டவர்கள் நடித்த படம் தான் மேட்டுக்குடி. இப்படத்தில் நடிகர் கவுண்டமணி இயக்குநரிடம் என் கூட நக்மாவை டூயட் ஆட சொல்லுங்க என்று கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அந்த இயக்குநர் நக்மாவிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு நக்மா அவருடன் நான் ஆடுவதா முடியவே முடியாது என்றும், இவருடன் ஆடினால் என் கெரியர் பாதிக்கும் என்று கூறி ம று த்துள்ளார். இதை கேட்ட கவுண்டமணி கோ ப த்தில் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி விட்டார். யூனிட்டே இதனால் ப த ற் றத்தில் இருந்தது. இதை பார்த்த நடிகை நக்மா என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.
அவர் கேட்டவுடன் அந்த காரணத்தை கூறினார். அதன் பிறகு நக்மா கவுண்டமணியுடன் டூயட் ஆ ட சம்மதம் தெரிவித்துள்ளார். இதை கேள்வி பட்ட கவுண்டமணி வி ழுந்து விழு ந்து சிரித்துள்ளாராம். பின் படத்தில் அந்த காட்சியில் வேறு வழியில்லாமல் நடிகை நக்மா நடித்து கொடுத்துள்ளார்.