திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வளம் வரும் நயன்தாரா விக்னேஷ்சிவனை 7 வருடங்களாக காதலித்து கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று வீடியோ எடுத்து வெளியிட 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு பல சர்ச்சைகளுக்குப் பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியாக இருக்கிறது. வீடியோவின் ப்ரமோ நெட்பிலிக்ஸ் தளத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது.