தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நல்ல கதைக்களம் கொண்ட படங்களைத் தேந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். இவர் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர் நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் விருமன் படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.
மருத்துவத் துறையில் இருந்து வந்த இவர் இப்படத்தில் கிராமத்து கதாநாயகியாக நடித்துள்ளார். முதல் படத்திலேயே நடித்ததோடு மட்டுமல்லாமல் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடலை அவருடன் சேர்ந்து பாடியும் இருக்கிறார் அதிதி சங்கர்.
மதுரை வீரன் என்று ஆரம்பிக்கும் இப்பாடலை சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற ஆடியோ லான்ச்சில் கூட அதிதி பாடி காட்டியிருக்கிறார். ஆனால் இப்பாடலை முதலில் யுவன் சங்கர் ராஜா சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியை வைத்துத் தான் பாட வைத்திருக்கிறார்.
பாடல் முழுமையாக முடிந்தபின் அதிதியை பாட வைத்து ராஜலட்சுமி பாடியதை யுவன் நீக்கி இருக்கிறாராம். இதனால் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளதாக யுவன் மீது ராஜலட்சுமி சங்கடத்தில் இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.