ரித்திகா தமிழ் செல்வி ஒரு இந்திய தமிழ் நடிகை ஆவார். காமெடி ரியாலிட்டி ஷோ காமெடி ராஜா கலக்கல் ராணியின் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். ரித்திகா முதன்முதலில் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடரில் 2018 இல் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது அறிமுகத்திற்குப் பிறகு, 2020 இல் பாக்கியலட்சுமி என்ற மற்றொரு விஜய் டிவி சீரியலில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
2021 இல், பிரபலமான நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாலியில் போட்டியாளராகப் பங்கேற்றார். 2021 இல், அவர் பல சிறப்பு நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். அவர் பின்னர் நம்மவர் கமல், ஸ்டார்ட் மியூசிக் (சீசன் 2) மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றி முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “Finally… !! MRS.VINU with god’s grace??need all ur love & blessings to us ❤️???” என பதிவிட்டுள்ளார். அதாவது இவர் திருமணம் செய்த நபர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவரே என தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.