தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சமந்தா – நாக சைதன்யவாக தான் இருக்க முடியும். கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு சமீபத்தில் அவர்கள் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் நாக சைதன்யா மட்டுமின்றி அவரின் தந்தை நாகார்ஜூனாவின் முதல் கல்யாணமும் பிரிவில் தான் முடிந்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும். ஆம் நடிகர் நாகார்ஜூனா டி.ராமநாயுடுவின் மகளும் நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லட்சுமி என்பவரை தான் அவர் முதல் திருமணம் செய்துகொண்டார்.
பின் நடிகை அமலாவை காதலித்த நாகார்ஜூனா லட்சுமியை பிரிந்து, அம்லாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் நாகார்ஜூனா மற்றும் லட்சுமிக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.