சற்றுமுன் 24 வயதேயான பிரபல முன்னணி இளம் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்..!! அவர் யார் தெரியுமா..?? இந்த வயதில் மாரடைப்பால் மரணமா என கதறி ாலும் அவரது குடும்பத்தினர்..!!

Cinema News Death News Image News

நவம்பர் 14ம் தேதி அயிந்திரில்லா ஷர்மா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவருடைய காதலர் சப்யாசாச்சி சவுத்ரி தனது சோஷியல் மீடியாக்களில் Pray for Aindrila ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரசிகர்கள் அனைவரும் அவர் மீண்டு வர பிரார்த்தனை செய்ய வேண்டி கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்தோடு இன்று அயிந்திரில்லா காலமான நிலையில், அவர் மிகுந்த மனவேதனையில் உடைந்து போயுள்ளார். பிரபல நடிகை அயிந்திரில்லா ஷர்மா(24) மரணம்! அதிக மன அழுத்தம் காரணமாக இப்போதெல்லாம் 30 வயதை கடந்த இளைஞர்களுக்கே மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் நிலையில், வெறும் 24 வயதே ஆன வங்காள நடிகை மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்துள்ளார்.

பெங்காலி நடிகை அயிந்திரில்லா ஷர்மா கடந்த நவம்பர் 14ம் தேதி திடீரென அடுத்தடுத்து மாரடைப்புகள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை (20-11-2022) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்ததும் நடிகையின் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் வங்காள சினிமா துறை என ஒட்டுமொத்தமாக அனைவருமே சோகக் கடலில் மூழ்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *