21 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் கால் பாதிக்கும் பிரபல நடிகரின் மனைவி…!! யார் தெரியுமா…? அதுவும் எந்த நடிகருடன் தெரியுமா…? சூப்பர் சான்ஸ் மி ஸ் பண்ணிடாதீங்க எனக்கூறும் ரசிகர்கள்…!!

Cinema News Image News

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழில் வாலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் கதையைக் கொண்டிருந்த இப்படம் நேரடியாக ஒடிடி-யில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டியுடன் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஜோதிகாவின் பாலிவுட் ரீ-எண்ட்ரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி இந்தியில் ஒரு படம் உருவாகவுள்ளதாகவும், அதில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவர் இந்தியில் 1998-ம் ஆண்டு வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ஜோதிகா, 2001-ல் ‘லிட்டில் ஜான்’ என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவி ல் லை. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் பொல்லாவாக நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்.

அவருடன் ஜோதிகா மற்றும் ஆல்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் துஷார் இத்ராணி இயக்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும் இந்தி படத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எ திர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிகா தற்போது மலையாளத்தில் தயாராகும் காதல் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *