அந்த காலத்திலிருந்து தற்போது வரை கோலிவுட்டில் ஜாம்பவானாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் இளம் ஹீரோக்களையும் பொறாமைப்படுத்தும் வகையில் தான் இருக்கும். இவருடைய படங்கள் அனைத்தையும் அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டாடுவார்கள். இவரின் ஒவ்வொரு படமும் வெற்றிப் படமாகத்தான் இருக்கும். இப்படி சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அகராதியில் தோல்வி என்பது இருக்கக் கூடாது என நினைப்பவர்.
ஆகையால் அவருடைய பிளாப் படத்தை வெற்றி படமாக மாற்றுவதற்காக தற்போது பக்கா பிளான் போட்டிருக்கிறார்.நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தனது 169 வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வி றுவி றுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’பாபா’. இந்த படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது.
ஆனால் இந்த படம் எ திர்பார்த்த வெற்றியை பெறவி ல் லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ரிலீஸான போது ஒரு பிரபல அரசியல் கட்சி இந்த படத்திற்கு எதிராக பி ர ச் ச னை செய்தது என்பதும் அதனால் பெரும் ப ரப ரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இ ந்த நிலையில் 20 ஆண்டுகள் க ழி த்து தற்போது ’பாபா’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினியை சந்தித்து பேசி உள்ளார். இந்த படத்திற்கு மீண்டும் படத்தொகுப்பு பணி செய்யப்பட்டுள்ளதாகவும் கலர் கிரேடிங், ரீமிக்ஸ் உள்பட பல டிஜிட்டல் அம்சங்கள் இடம் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்போது வெளியாகும் ’பாபா’ படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு புது அனுபவம் ஏற்படும் என்றும் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் எ தி ர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரீ-ரிலீசின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே கமல்ஹாசனின் ’ஆளவந்தான்’ திரைப்படம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் ரஜினியின் ’பாபா’ திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.