தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் – நடிகை மேனகா தம்பதியின் மகள் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மா யம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
அதன் பின்னர் விஜய், தனுஷ், விக்ரம், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுடன் நடித்து வருகிறார். ஆனால் இதுவரை தல அஜித்துடன் மட்டும் ஜோடி போட்டு ந டிக்கவி ல் லை. கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மகாநடிகன் படம் திருப்பு முனையாக அமைந்தது. கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். மேலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், அவர் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்றும், அவர் அ ர சி யலிலும் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தான் தற்போது சமூக வலை தளங்களில் ஹா ட் டா ப்பிக்காக மாறியது. இது குறித்து அவர் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “கீர்த்தி சுரேஷ் கை வ சம் நிறைய படங்கள் இருக்கிறது. நடிப்பில் மட்டுமே க வ ன ம் செலுத்தி வருகிறார்” என்றனர்.
இவர் கைவசம் தற்போது தமிழில் சைரன், மாமன்னன் ஆகிய படங்களும் தெலுங்கில் போலா சங்கர் மற்றும் தசரா ஆகிய படங்களும் உள்ளன. திருமணத்திற்கு பிறகு கீர்த்தி நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தற்போது இச்செய்தி இணையதளத்தில் வை ர லா கி வருகிறது. கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த அறிவிப்பு மிக வி ரைவில் வெளியாகும் என எ தி ர்பார்க்கப்படுகிறது.