தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. இவர் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் நவரச நாயகன் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார். அந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து செங்கோட்டை, சிவசக்தி, அருணாச்சலம், அடிமை சங்கிலி போன்ற படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்தார்.
அதன் பின் அஜித்துடன் ராசி, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், மி ன்சா ர கண்ணா போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்த ரம்பா 2010ல் இந்திரன் பத்மநாதன் என்ற கனடா வாழ் இலங்கை ஈழத்து இளைஞரை இவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரம்பா இதுவரை நடிகர் விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் நடிகர் அஜித்துடன் ஒரே ஒரு படம் மட்டும் தான் நடித்துள்ளார் நடிகை ரம்பா.
அதற்கு காரணம் என்னவென்றால் ராசி என்ற திரைப்படத்தில் அஜித்துடன் நடித்துள்ள ரம்பாவுக்கு அது பிளாப் படமாக அமைந்து விட்டது. தற்போது மீண்டும் அஜித்துடன் நடிக்க ஆரம்பிப்பது கொஞ்சம் க ஷ் டம் என்று சமீபத்தில் கூட ரம்பா கூறியிருந்தார்.