90களில் தமிழ் சினிமாவிலேயே ரஜினி, கமல் போன்ற மா ஸ் நடிகர்கள் கூட வாங்காத 1 கோடி ரூபாய் சம்பளத்தை முதன் முதலாக வாங்கிய நடிகர் இவர்தான்…!! அந்த நடிகர் யார் தெரியுமா? அட இவரை யாருமே எ தி ர்பா ர்க்கலையே…!!

Cinema News General News Image News

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். தற்போது ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் உள்ளிடோரின் சம்பள பட்டியல் ரூ. 100 கோடியை தாண்டி செல்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முதலில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் குறித்து சுவரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் என்னைப் பெத்த ராசா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் ராஜ் கிரண்.

தமிழ் சினிமாவில் கம்பீரமாக என்ட்ரியாகி, பல ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்தவர் தான் ராஜ்கிரண். ஒரு ஹீரோவிற்கான ஸ்டைல், கலர், உடல் அமைப்பு என எதுவும் இல்லாமல், மண் சார்ந்த கதைகளுக்கும் க ர டு மு ர டான கேரக்டர்களுக்கும் அப்படியே பொருந்தி இன்று வரை ரசிகர்களின் மனதில் நீ ங் கா இடம் பிடித்தவர். இவர் இதனைத் தொடர்ந்து என் ராசாவின் மனசிலே,  அரண்மனைக் கிளி, மாணிக்கம், தலைமுறை எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இ று தியாக கார்த்தி நடிப்பில் வெளியான வி ருமன் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் சினிமா வரலாற்றில் இவர் தான் முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த மாணிக்கம் படத்தை கே.வி.பாண்டியன் இயக்கினார்.

அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்த இந்த படத்தில் ஜெயந்தி, மணிவண்ணன், ஶ்ரீவித்யா, வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்காக நடிகர் ராஜ்கிரண் ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஏனெனில், அந்த கால கட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த் ஆகியோரின் சம்பளமே ரூ.85 லட்சத்துக்குள்தான் இருந்தது. இதன் மூலம் 90களிலேயே ரூ. 1 கோடி சம்பளம் முதல் பெற்ற முதல் நடிகராக ராஜ்கிரண் உள்ளார்.

இந்த படத்தை தயாரித்த டி.சிவாவும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “அது உண்மைதான். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. ஒரு கோடியே 10 லட்சம்” என்று தெரிவித்தார். தற்போது குணசித்திர வேடங்களில் நடிப்பதற்கும் அவர் கோடிகளில் தான் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *