தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் கதாநாயகியாக ஜொலிக்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு சிலர் முதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க அது மக்களுக்கு பிடித்து போகவே வேறு சில படங்களிலும் குழந்தை நட்சத்திரமாகவே நடிப்பவர்களும் உண்டு. அவர்களே பின்னாளில் ஹீரோயினாக அறிமுகமாகி முன்னணி ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்.
இப்படி பலர் இருக்க தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பேபி சாரா. இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்து அசத்தி இருப்பார். அதன் பின்னர் சைவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் இந்தப் படம் மக்கள் மத்தியில் ஓரளவே இடம் பிடித்தது. அதன் பின்னர் இவர் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் குவியவே கொஞ்ச காலம் அங்கு நடிக்க சென்று விட்டார். ஆனால் தற்போது இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என தகவல் பரவி வருகிறது.
அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா…? பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் கதாநாயகியாக வளம் வரப் போகிறார் பேபி சாரா. எது எப்படியோ என்னை அறிந்தால் புகழ் அனிகா போல வலம் வர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.