என் மகனுக்கு பொருத்தமான பெண்ணை பார்க்க அவர் ஒருவரால் மட்டுமே முடியும்...!! அவர் யார் தெரியுமா...? சிம்பு திருமணம் குறித்து டி. ராஜேந்தர் கொடுத்த பேட்டி...!!

என் மகனுக்கு பொருத்தமான பெண்ணை பார்க்க அவர் ஒருவரால் மட்டுமே முடியும்…!! அவர் யார் தெரியுமா…? சிம்பு திருமணம் குறித்து டி. ராஜேந்தர் கொடுத்த பேட்டி…!!

General News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரும் தன்னுடைய தந்தை போலவே நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்த சிம்புவுக்கு பெண் ரசிகைகள் ஏராளமானோர் உள்ளனர். அதே போல் நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் போன்ற சில நடிகைகளுடன் காதல் கி சுகி சுவிலும் சிக்கிய சிம்பு 39 வயதை எட்டிய போதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

எனவே அவ்வப்போது இவருடைய திருமணம் குறித்து அ டிக்க டி, வ த ந் திகள் எழுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. சமீபத்தில் கூட, சிம்பு நடிகை லட்சுமிமேனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அந்த வ த ந் தியும், வந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. சிம்பு உருகி உருகி காதலித்த நயன்தாரா மற்றும் ஹன்சிகா இருவருமே, இந்த ஆண்டு தங்களுடைய காதலர்களை கரம் பிடித்த நிலையில் தற்போது சிம்புவின் திருமணம் குறித்து சிம்புவின் தந்தை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ள தகவல் வை ர லா கி வருகிறது.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் இலட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் சாமி தரிசனம் செய்தார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு தாயகம் திரும்பிய டி.ராஜேந்தர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு நடிகர் டி.ராஜேந்தர் நேற்று வந்தார். அப்போது, தனது மகன் சிலம்பரசனின் ஜாதகத்தை வைத்துச் சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், தான் ம றுபி றவி எடுத்துள்ளதாகவும், கடந்த முறை பீப் பாடல் பி ர ச் ச னையின் போது இங்கு வந்து தனது கு றை களை வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கையாக வைத்த நிலையில், சுமுகமாக பி ரச் ச னை தீர்ந்தது என்றார். நடிகர் சிலம்பரசனின் திருமணம் குறித்த கேள்விக்கு, எனக்கு எனது மனைவிக்குப் பிடித்த பெண் என்பதைத் தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன்.

நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் நேற்று காஞ்சிபுரம் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பிரசாதங்களை அளித்தனர். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, என் மகனுக்கு நானோ என் மனைவியோ அல்லது வேறு யாரோ பெண் பார்ப்பதைவிட இறைவன் தான் பெண் பார்க்க வேண்டும்.

இதனை அடுத்து சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் என் மகனுக்கு பெண் பார்க்கும் திறமை ஒரே ஒருவருக்கு மட்டுமே உண்டு என்று சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் பேட்டி அளித்துள்ளார். இந்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு திருமண செய்தி கூறாவிட்டாலும், அடுத்து ஆண்டில் கண்டிப்பாக திருமணம் குறித்த தகவலை வெளியிட வேண்டும் என சிம்புவின் ரசிகர்கள் இப்போதே தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் மகனுக்கு பொருத்தமான திருமகளை, கலைமகளை, குணமகளை என் வீட்டு மருமகளை இறைவன் தான் பார்க்க வேண்டும். அவர் சிம்புவுக்கு சரியான ஒரு மணமகளை பார்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் என்னை இந்த அளவுக்கு ஆளாக்கிய ரசிகர்களுக்கும் என் மகனுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து சிம்பு திருமணம் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கும் என்று எ தி ர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *