சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக பலர் திகழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு இருவரும் படங்களிலும் நடித்து தங்களின் மார்க்கெட்டை இ ழக்காமல் பார்த்து கொள்வார்கள். அந்த வரிசையில் இருப்பவர் பாலிவுட் முன்னணி நடிகர் சைஃப் அலிகான் கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2001ல் அம்ரிதா சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாரா அலி கான், இப்ராஹிம் அலி கான் என்ற மகள் மகனை பெற்றெடுத்தார். இதையடுத்து சயீப்பிற்கும் அம்ரிதாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து சக நடிகையான கரீனா கபூரை கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டார். 2016ல் தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது மகளாக சாரா அலி கானின் 25வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் 40 வயதான நிலையில் கரீனா கபூர் கர்ப்பமாகி இருந்தார். பிரசவ வலி ஏற்பட்ட கரீனாவை ம ருத்துவமனையில் சைஃப் அலி கான் கொண்டு சேர்த்தார். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.