ரிஷிபாலா நேவல் தொழில்ரீதியாக சிம்ரன் என்று அழைக்கப்படுகிறார், இவர் ஒரு இந்திய நடிகை, தயாரிப்பாளர், நடனக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார், இவர் ஒரு சில தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களுடன் தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமாகப் பணியாற்றுகிறார். அவர் தனது பால்ய நண்பரான தீபக் பாக்காவை மணந்தார். தம்பதியருக்கு அதீப் மற்றும் ஆதித் வீர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சிம்ரன் முன்னணி ஹீரோயினாக இருந்தபோது இவர் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் நவரச நாயகன் கார்த்திக். அதாவது சிம்ரன் திரையுலகில் அடி எடுத்து வைத்த போது கார்த்திக் நடிப்பில் வெளியான ‘பிஸ்தா, சுந்தர பாண்டியன், ஹரிச்சந்திரன், ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம்’ போன்ற பல ஹிட் படங்கள் வெளியானது. இதனால் கார்த்திக்குடன் ஒரு படத்திலாவது, இணைந்து நடிக்க முடியாத என தன்னுடைய 20 வயதில் ஏங்கிய சிம்ரனுக்கு,
தற்போது 46 வயதில் அந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பிரஷாந்த் ஹீரோவாக நடித்து வரும் ‘அந்தகன்’ படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளார். இப்படியதில் நிறைய முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இப்படம் ஏற்கனவே பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் ஹிட் பெட்ரா ஒரு படத்தின் ரீமேக் தானாம். இந்நிலையில் 26 வருடங்களுக்கு பின் சிம்ரனின் ஆசை நிறைவேறியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளமை ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.