12000 சதுர அ டியில் மகன்களுக்காக நடிகர் நெப்போலியன் க ட் டியுள்ள பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீடு…!! பார்ப்போரை பி ர மி க்க வைக்கும் வசதிகள்…!! இதோ வீடியோ…!!

General News videos

அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன் வீட்டின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வை ர ல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மு ர ட் டு வி ல் ல னாக 80, 90 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் தான் நெப்போலியன். கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் வி ல் ல னாக இருந்தும் கதாநாயகனாக முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வந்தார். தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுரியில் தான் நெப்போலியன் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது.

அதன் பின் பல போராட்டங்களுக்குப் பின் 1991ல் நெப்போலியன் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நெப்போலியன், 1993-இல் சூப்பர் ஹிட் படமான சீவலப்பேரி பாண்டியில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து இன்று வரை பல படங்களில் பல வித கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இவர் பல  படங்களில் நடித்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும் கோலிவுட் தாண்டி ‘டெவில்ஸ் நைட்’, ’க்ரிஸ்மஸ் கூப்பன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து நெப்போலியன் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல், அரசியல்வாதியும் ஆவார். தற்போது இவரது குடும்பத்தில் உள்ளவர்கள் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகின்றனர். நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவரின் மூத்த மகன் தனுஷுக்காக தான் இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கின்றனர். காரணம்  அங்கு தனுஷிற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. அங்கு 6 வருடங்களுக்கு முன் மகன்களுக்காக புதிய வீட்டினை வாங்கி வாழ்ந்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் நடிகர் நெப்போலியன் அவர்கள் ஹாலிவூட் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த ஹாலிவுட் படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்து இருந்தார். நெப்போலியனுக்கு இது இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடுவில் சிறிது காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். பின் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற படத்தில் நெப்போலியன் நடித்திருந்தார்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன் அங்கு, தான் வசிக்கும் வீட்டை பிரபல யூடியூப்பரான இர்ஃபானுக்கு சுற்றிக் காட்டியுள்ளார். அது தொடர்பான வீடியோவை இர்ஃபான் தன்னுடைய யூடியூப் சேனலில் ஹோம் டூராக பதிவேற்றி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வை ர லா கி வருகிறது. அந்த வீடியோவில் பல சுவாரசியமான தகவல்களை நெப்போலியன் பகிர்ந்து உள்ளார் அதை இங்கு பார்ப்போம். தற்போது மீண்டும் இவர் படங்களில் க ல க்கி கொண்டு வருகிறார். இந்நிலையில் நெப்போலியன் அவர்கள் அமெரிக்காவில் தான் இருக்கும் வீட்டை சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

12,000 சதுர அடியில் இவர் வீடு கட்டியிருக்கிறார். மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த வீட்டில் நீச்சல் குளம், தியேட்டர், கார் செட்டப், பாஸ்கெட் பால், அரங்கம் போன்ற பல வசதிகள் இருக்கிறது. அந்த வீடியோவில் நெப்போலியன் பேசும் போது,  “வீடு முழுவதுமே என்னுடைய முதல் மகனான தனுஷூக்காக பார்த்து பார்த்து மாற்றி அமைத்து வைத்துள்ளேன். எனக்கு எல்லாமே என்னுடைய இரண்டு மகன்கள் தான். அவர்கள் இரண்டு பேரின் ஆ சையை பூர்த்தி செய்வதற்காக தான் இந்த வீட்டை நான் இப்படி பராமரித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக அழகாக நெப்போலியன் கட்டி இருக்கிறார். இவர் 12 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். ஆனால், ஆறு வருடங்களுக்கு முன்பு தான் இவர் அமெரிக்காவில் வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். மேலும், நெப்போலியன் மகன் தனுஷ் பிரபல youtube பிரபலம் இர்பான்னுடைய தீவிர ரசிகர். அமெரிக்காவிற்கு இர்பான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அப்போது அவரை தன்னுடைய வீட்டிற்கு தனுஷ் அழைத்திருக்கிறார். வீட்டிற்கு வந்த இர்ப்பானை நெப்போலியன் வரவேற்று தன்னுடைய வீட்டையும் சுற்றி காட்டி இருக்கிறார். அந்த வீடியோவை தான் youtube சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *