தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதேபோல லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் முன்னணி நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியுள்ளார்கள். இந்த நிலையில் தந்தையான அனுபவம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
மேலும் இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து, நான்கு மாதத்திலேயே வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதை அறிவித்திருந்தார்கள். மேலும் இந்த விஷயம் மிகப்பெரிய ச ர் ச் சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கான ஆதாரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கடைசியில் இந்த பி ர ச் ச னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. மேலும் தன்னுடைய குழந்தைகள் பற்றி விக்னேஷ் சிவன் கூறியது என்னவென்றால் நான் இரண்டு குழந்தைக்கு தந்தை என்பதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை.
குழந்தைகளுடன் இருக்கும் போது ஒரு தனி உலகில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய குழந்தைகளுடன் நீண்ட நேரம் செ லவ ழி த்து வருவதன் காரணமாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் என்னுடைய வாழ்வில் மிகப் பெரிய அ தி ர்ஷ்டங்களில் ஒன்று தான் இந்த குழந்தைகள் என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தனது மனைவி நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது முதல் முறையாக தங்கள் குடும்பம் நான்கு பேர் கொண்ட குடும்பமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் நயன்தாரா ஒரு சிறந்த தாய் என்றும் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் அவர்கள் அடுத்ததாக தல அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இதில் ஆரம்ப கட்ட பணிகள் தற்பொழுது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் வேறு சில படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.