மணிரத்னம் மகனை பார்த்துள்ளீர்களா..!! அட... இளம் தமிழ் நடிகர்களையும் மிஞ்சிடுவார் போலயே..!! இதோ நீங்களே அவரது மகனின் புகைப்படத்தை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க..!!

மணிரத்னம் மகனை பார்த்துள்ளீர்களா..!! அட… இளம் தமிழ் நடிகர்களையும் மிஞ்சிடுவார் போலயே..!! இதோ நீங்களே அவரது மகனின் புகைப்படத்தை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க..!!

Cinema News Image News

மணிரத்னம் இயற்பெயர் கோபால ரத்னம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002 இல் பத்மஸ்ரீ விருது. வழங்கி கௌரவித்தது. தமிழ் திரையுலகில் (1980) 80களின் பிற்பகுதியில் பெரும் இயக்குனர்களான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் மணிரத்னம் தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், சாமானிய மக்களின் நிலைப்பாடு,

பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய திரைப்படம் இயக்கும் பாணியாகும்.  மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது.

இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன. இன்னும் இதைவிட அதிகமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு 500 கோடியை வசூல் செய்தது.திரைப்பட நடிகை சுஹாசினியை 1988 இல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர் தற்போது மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார். இந்நிலையில் இவரது மகனின் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *