தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து இன்று வரை சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் ரஜினி. தற்போது ரஜினிக்கு வயதாகி இருந்தாலும் கூட, பல நூறுக்கணக்கான நடிகர்கள் வந்தாலும் கூட இன்றும் அவரது மார்க்கெட் கொஞ்சம் கூட குறையாமல் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சினிமாவில் 168 படங்கள் வரை நடித்துள்ள ரஜினி அடுத்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் ரஜினியை பற்றியோ அல்லது அவரது படங்கள் பற்றியோ அவ்வப்போது சில செய்திகள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன.
அந்த வகையில் ரஜினி நடிப்பில், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் படையப்பா. இந்தப் படம் வெளியாகி அப்போது மக்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது மட்டுமல்லாமல் அதோடு நல்ல வசூலையும் அள்ளியது. இந்த படத்தில் ரஜினியின் பேச்சு, நடை, உடை, ஸ்டைல் போன்ற அனைத்தும் அவரது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம்.
இந்தப் படம் ரஜினி மற்றும் அவரது ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடிக்க பல நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்பு கடைசியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை படையப்பா படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடிக்க வைக்க கே எஸ் ரவிக்குமார் முடிவு எடுத்தார். ஆனால் சிவாஜி கணேசனோ இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார்.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ரஜினியிடம் சிவாஜியின் சம்பள விஷயம் குறித்து பேசி உள்ளார். ரஜினி அவர் கேட்கின்ற சம்பளத்தை எந்தக் குறையும் இல்லாமல் கொடுத்து விடுங்கள் எனக் கூறியுள்ளார். பின்பு படையப்பா படத்தில் சிவாஜி கணேசன் ரஜினிக்கு அப்பாவாக சென்டிமென்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்து அசத்தி இருந்தார்.