சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நிறைய பிரபலங்கள் மரணமடைந்து வருகின்றனர். முக்கியமாக சின்னத்திரையில் சித்ரா மற்றும் வெள்ளித்திரையில் விவேக் மற்றும் spb அவர்கள். இந்நிலையில் தற்போது சினிமா துறையில் இருக்கும் முன்னணி முக்கிய பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான கௌஷிக் சற்றுமுன் மாரடைப்பால்மரணமடைந்துள்ளார்.
இளம் வயதிலேயே இவர் மரணமடைந்து இருப்பது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அவருக்கு சினிமா துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிங்கர் தனுஷ், கெளதம் கார்த்திக், இயக்குனர் வெங்கட் பிரபு, தொகுப்பாளர் டிடி, நடிகர் துல்கர் சல்மான், நடிகை ராஷ்மிகா மந்தனா, மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கௌஷிக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.