இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினியின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா? எவ்வளவு பெரிதாக வளர்ந்துட்டார்…!! இதோ அவரது புகைப்படம்…!!

Image News

பொதுவாக சினிமாவில் பல இயக்குனர்கள் இருக்கின்றார்கள். அதில் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். 1983ம் ஆண்டு கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முதலில் சினிமாவில் நுழைந்தார். தற்போது பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் அவர் இயக்கிய முதல் 4 படங்களும் அவருக்கு கை கொடுக்காமல் போனது. அதன்பிறகு  5வதாக அவர் இயக்கி கார்த்திக் நடிப்பில் வெளியான மௌன ராகம் படம் பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

அதன் பிறகு நாயகன், ரோஜா, பாம்பே, தில் சே என தொடர்ந்து அவர் இயக்கிய அனைத்து படங்களும் டாப் லிஸ்டில் இருந்தன. தற்போது அவரது இயக்கத்தில் வெளியாகவுள்ள பிரம்மாண்ட படமான பொன்னியின்  செல்வன் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு படிப்படியாக சினிமாவில் வெற்றி கண்ட இயக்குனர் மணிரத்னம் 1988ம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 1992ம் ஆண்டு மகன் பிறந்தார். தற்போது வெளிநாட்டில் படிக்கும் அவர் அவ்வப்போது இந்தியா வருவது வழக்கம். தற்போது இவர்களது ஒரே மகன் நந்தனின் பு கைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Copyright cineulagam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *