17 செப்டம்பர் 2020 அன்று, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அடுத்த முயற்சியில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க, அனிருத் இசையமைக்க விக்ரம் என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தை அறிவித்தார். இது ஒரு நடிகராக கமல்ஹாசனின் 232வது படமாகும். இந்தத் திரைப்படம் 3 ஜூன் 2022 அன்று வெளியிடப்பட்டது.
மேலும் இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் மற்றும் நான்காவது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறியது. ஆகஸ்ட் 2022 இல், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. இது இப்போது 2023 கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்திற்குப் பிறகு, அவர் தனது 234வது படத்துக்காக மணிரத்னத்துடன் இணைந்து மீண்டும் இணைகிறார். இந்நிலையில், இப்படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா தேர்ந்தெடுத்துள்ளாராம் இயக்குனர் மணி ரத்னம். பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் திரிஷா நடிக்க வைக்க மணி ரத்னம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு என்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும்.