இந்த உலகில் ஒரு சிலரே மனிதாபிமானத்துடன் இருக்கின்றனர். அப்படி இருக்கும் ஒரு திருநங்கையின் வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை தான் பார்க்க போகிறோம். கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு திருநங்கை தான் பவானி. அன்புக்காக எங்கும் ஒருவர் தான் இவர். இந்திய சட்டப்படி திருநங்கைகள் குழந்தை எடுத்து வளர்க்க கூடாது என நிறைய சட்டங்கள் இருக்கிறது. அப்படி இவர் ஒரு நாள் சாலையில் நடந்து செல்லும் போது ஒரு குட்டி நாய் இவரை போல் அன்பிற்கு ஏங்கி யாரும் இல்லாமல் படுத்து கொண்டிருந்தது.
அருகில் அதன் தாய் நாய் இ ற ந்து கிடந்தது. இதை பார்த்த இவர் அந்த குட்டி நாயை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். நிறைய பேர் போல் கட்டி வைக்காமல் அதற்கு தேவையன உணவு கொடுத்து சுதந்திரமாக வளர்த்து வந்தார். அப்படி ஒரு நாள் அந்த நாய் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தொப்புள் கொடியுடன் இருக்கும் 8 மாத குழந்தை சாலையில் கிடந்தது. அந்த நாய்க்கு என்ன நினைத்ததோ தெரியவில்லை அந்த குழந்தையை கவ்வி கொண்டு அந்த திருநங்கையிடம் சென்றது.
அந்த திருநங்கை பயந்து மருத்துவமனையில் இருந்து எடுத்துவிட்டதோ என போலீசிடம் சென்று குழந்தை ஏதாவது காணாமல் போய் உள்ளதா என கேட்டார். அங்கு இருந்த போலீஸ் ஆராய்ந்து அப்படி எதுவும் இல்லை என அவரிடம் கூறினார்கள். அந்த திருநங்கை இந்த குழந்தையை நானே வளர்த்து கொள்ளவா என கேட்டார். அதற்கு போலீஸ் சற்று யோசித்து எப்படியும் இந்த குழந்தையை அனாதை இல்லத்தில் தான் விடுவோம் என்று நினைத்து சரி நீங்களே வளர்த்து கொள்ளுங்கள் என கூறி ஒரு பாத்திரத்தில் கையெழுத்து போட சொன்னார்கள்.
அதில் இந்த குழந்தையின் பெற்றோர்கள் இந்த குழந்தையை திருப்பி கேட்டால் கொடுத்து விட வேண்டும் என இருந்தது. அதற்கு அந்த பெண் ஒப்பு கொண்டார். நானும் யார் துணையும் இல்லாமல் இருக்கிறேன். இந்த குழந்தையும் அது போல் இருக்க கூடாது என கூறி அந்த குழந்தையை வளர்க்க ஆரம்பித்தார். இந்த திருநங்கையை செயலை பார்த்து பலரும் கண்கலங்கி இருக்கின்றனர். இப்போது இவருக்கு அந்த நாய் மற்றும் குழந்தையோடு சேர்த்து இரண்டு குழந்தைகள். திருநங்கைக்கு ஒரு நாயால் குழந்தை கிடைத்த சம்பவம் ஆச்சர்யமடைய வைத்துள்ளது.