40 வருடத்தில் 310 கோடி தா னம் செய்த ஒரே நடிகர்…!! மன்னன் என்ற வார்த்தைக்கு அ ர்த்தமாகவே வாழ்ந்த நடிகர்…!! இத்தனை தானங்களா…? யார் தெரியுமா…? ஆ ச்சர்யத்துடன் பார்க்கும் ரசிகர்கள்…!!

General News Image News

தமிழ் சினிமாவில் இன்று வரை சிவாஜி கணேசன் அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. நடிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். சிவாஜி கணேசன் அவருடைய குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்தார். அவருக்கு மூன்று மூத்த சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருந்தனர். இவர் கமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிவாஜி அவர்களுக்கும் நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவரது இளைய மகன் தான் பிரபு. அவரும் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகர் ஆவார். சிவாஜி கணேசன் 1950ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.

தற்போது அந்த தயாரிப்பு நிறுவனம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. அதை இப்போது அவரது மூத்த மகன் ராம்குமார் அவர்கள் தான் கவனித்து வருகிறார். இவருக்கு சாந்தி, தேன்மொழி என இரு மகள்கள் உள்ளனர். அவரது இரண்டு பேரன்களான விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ராம்குமார் ஆகியோரும் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்குமாரின் மகன் துஷ்யந்த் ராம்குமாருக்கு ஜூனியர் சிவாஜி என்ற மேடைப் பெயர் கூட உள்ளது. மேலும், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு 2012-ம் ஆண்டு வெளியான கும்கி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். யானையை தானம் செய்த வள்ளல், ஏறக்குறைய 40 வருடங்களாக மன்னன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்த ஒரே தமிழ் நடிகரை ரசிகர்கள் இன்று வரை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோலிவுட்டில் 40 வருடங்களில் 310 கோடி நன்கொடை அளித்த ஒரே நடிகர் இவர்தான் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி ரசிகர்கள் மத்தியில் வை ர லா கி வருகிறது. செவிலியர் சிவாஜி கணேசன் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதன்  பின்னர் 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என இந்த மொழிகளில் எல்லாம் சேர்த்து சுமார் 288 படங்களிலும், தமிழில் மட்டும் 250க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் திலகம் அவர்கள். இதுவரை இளம் நடிகர்கள் அனைவருக்கும் முன் மாதிரியாக இருந்து வரும் சிவாஜி, நிஜ வாழ்க்கையிலும் ராஜா என்ற வார்த்தைக்கு ஏற்றார் போல் வாழ்ந்து வந்திருக்கிறார்.

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன். இவர் 1953 முதல் 1993 வரை செய்த தொண்டு குறித்து பிரபலம் ஒருவர் வி சா ர ணை நடத்தியுள்ளார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வை ர லாக பேசப்பட்டு வருவது மட்டுமின்றி சிவாஜி படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் சிவாஜி சினிமாவில் பிரவேசித்த அடுத்த வருடம் தொடங்கி சுமார் 40 வருடங்கள் செய்த நன்கொடைகள் மட்டும் 310 கோடிகள் ஆகும். அதுமட்டுமின்றி இலங்கையில் மருத்துவமனை ஒன்றையும் கட்டியுள்ளாராம். கல்வி கூடங்கள் கட்டுவதற்கும், இயற்கை சீற்றங்களின் போதும் போர், கால சமயங்களிலும் பல நிதி உதவிகளை சிவாஜி கணேசன் செய்துள்ளார். 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார்.

1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் கொடுத்துள்ளார். 1965ல் இந்தியா பாகிஸ்தான் போ ரின் போது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் தனக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 சவரன் போர் நிதியாக கொடுத்தார். கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி, அதில் தனது செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார் அது இப்போதும் நினைவு சின்னமாக திகழ்கின்றது. தான் போட்டிருந்த 450 பவுன் நகையையும் க ழ ற்றினார். இதற்குப் பிறகு, அவர் தனது க டை சி நாட்களில், யானைகளை தானமாக வழங்கினார்.

மேலும் யானை விவசாயி ஒருவர் சிவாஜியிடம் வந்து தனக்கும் யானைக்கும் சரியாக சாப்பிட முடியாததால் உதவி செய்யுமாறு கேட்ட போது 2 ஏக்கர் நிலத்தை வாங்கி அதை விவசாயியிடம் கொடுத்து நீங்கள் எக்காரணம் கொண்டும் யானையை பட்டினி போட்டு விடாதீர்கள் என்று கூறியுள்ளார். இவ்வளவு தொண்டு செய்த சிவாஜி அது பற்றி எதையும் வெளிக்காட்டவி ல் லை. ஏனென்றால், தர்மம் செய்வது ஒரு மனிதனின் தவம் என்று அவர் உ றுதியாக நம்புகிறார். 1968-ல் உலகத் தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற போது சென்னை  கடற்கரையில் திருவள்ளுவருக்கு தானே முன் மாதிரியாக நின்று சிலை அமைத்து கொடுத்தார். மேலும் உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் நிதியாக அளித்தார். தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை ந லி ந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக் கொள்ள இ லவசமாக வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *