பொதுவாக மனிதர்கள் எவ்வளவு பெரிய ஆளாக வாழ்க்கையில் உயர்ந்திருந்தாலும், திருமணமாகி பிள்ளைகளை பெற்றாலும் கூட தாய்க்கு அவர்கள் குழந்தைகளாத்தான் தெரிவார்கள். சினிமாத்துறையை சேர்ந்தவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. பெரிய பிரபலங்களின் அம்மாக்கள் பேட்டிகளில் கலந்து கொண்டு தன் குழந்தைகளை பற்றி சிறு வயதில் அவர்கள் செய்த குறும்புகளையும், விளையாட்டுகளையும், சுட்டித்தனங்களையும் கூறி மகிழ்ச்சியடைவார்கள். அந்த வகையில் ஒரு சில அம்மாக்கள் சொல்வதைக் கேட்கும் போது இவரா இப்படியெல்லாம் செய்தார் என்று வியக்கும் அளவிற்கு சிலர் இருப்பார்கள்.
அந்த வகையில் பார்க்கும் போது தனது ஒவ்வொரு படத்திலும் தனது நகைச்சுவையின் மூலம் சிரிப்பை மட்டுமல்லாமல் சிந்தனையையும் வாரி வழங்கியவர் தான் நடிகர் விவேக். நடிகர்களின் கலைஞன், சின்னக் கலைவாணர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பவர்தான் விவேக். இவரைப்பற்றி இவரது தாயார் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு அவரைப் பற்றி பல விஷயங்களை சொல்லியிருக்காங்க. ரசிகர்களுக்கே தெரியாத சில விஷயங்களையும் கூட சொல்லியிருக்காங்க. அந்த பெட்டியில அவங்க விவேக்கை பற்றி என்ன சொல்லியிருக்காங்கனு பாக்கலாம் வாங்க.
நடிகர் விவேக் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அப்டினே சொல்லலாம். பொதுவாக ஒரு காமெடி நடிகர் என்றால் மற்றவர்களை கி ண் டல் செய்வது, உ ருவ கே லி செய்வது அப்படினு காமெடி செய்து தான் மக்களை மத்தியில் இடம் பிடிச்சிருக்காங்க. ஆனால் நடிகர் விவேக் அவர்கள் அப்படியில்லாமல் மா றுபட்ட தனது நகைச்சுவையின் மூலமாக சமூக சீர்திருத்த கருத்துக்களாகட்டும், மூட நம்பிக்கைக்கு எ தி ரான விஷயங்களாகட்டும் மக்களின் அ றியாமை சம்மந்தப்பட்ட விஷயங்களாகட்டும் இப்படி சமூகத்திற்கு தேவையான நிறைய விஷயங்களை சொல்லி காமெடி செய்வதன் மூலம் மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்ததோடு மட்டுமல்லாமல் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர் விவேக். ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களுடைய சிஷ்யனாக இருந்து அவருடைய வாக்கின்படி, நாட்டில் எவ்வளவோ ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய சார்பிலும் எத்தனையோ லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கிறது. இன்று அவர் இந்த உலகில் இ ல் லையென்றாலும் அவர் நட்ட ஒவ்வொரு மரக்கன்றுகளும் மரங்களாக வளர்ந்து அவருடைய பெயரை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது.
சினிமாவில் எத்தனையோ ஹீரோக்களுடன் இணைந்து நடித்த நடிகர் விவேக் குறித்து அவருடைய தாயார் ஒரு பேட்டியில் அவரைப் பற்றி சொல்லி இருக்காங்க. நடிகர் விவேக் அவர்கள் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் பிறந்த தினத்தன்று தான் பிறந்துள்ளார். அதனாலேயே இவர் நிறைய சாதனைகளை செய்ய வேண்டும் அப்படினு அவருடைய பெற்றோர்களால் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டாராம். ஊட்டி கான்வென்ட்ல படிச்சதால சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்குவாராம். அது மட்டுமில்லாம சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றையும், எழுதியிருந்தாராம்.
இந்த சிறு வயதிலேயே அவருக்கு இருந்த திறமையை பார்த்து விட்டு இந்திராகாந்தியும் அவருக்கு பதில் கடிதம் ஒன்றையும் எழுதியிருக்காங்க. அது மட்டுமில்லாம சிறு வயதிலிருந்தே நடிகர் விவேக் துரு துரு பையனாகவும், திறமையான பையனாகவும் இருந்திருக்கிறார். அந்த வயதிலேயே அவரே சொந்தமாக கதை எழுதி நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார். இன்னைக்கு திரைப்படங்களில் செய்யக்கூடிய நிறைய விஷயங்களை அவர் தனது சின்ன வயதிலேயே தனது இளமை கால கட்டத்திலேயே செய்திருக்கிறாராம். இவருடைய அக்கா டாக்டர் என்பதாலும், சிறு வயது முதல் நன்றாக படித்ததாலும் இவரும் டாக்டர் ஆக வேண்டும் அப்படினு முடிவு செஞ்சிருக்கிறார்.
அதன் பிறகு அவர் மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் சேர்ந்து விட்டார். அப்போதே படிப்பு வராத நிறைய பசங்கள வீட்டுக்கே கூட்டிட்டு வந்து பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார். அதைப் பார்த்த பெற்றோர்கள் இவர் ஒரு நல்ல கல்லூரி பேராசிரியராக வருவார் அப்படினு நெனச்சிருக்காங்க. ஆனால் அவர் நினைத்த மாதிரி டாக்டராகவும் ஆகாமல், அவருடைய பெற்றோர் நினைத்த மாதிரி ப்ரொபசராகவும் ஆகாமல் சட்டம் படித்து விட்டு சினிமாவுக்குள் வந்து விட்டார். அது மட்டுமில்லாமல் நடிகர் விவேக் அவர்கள் நடிப்பு என்பதையும் தாண்டி நிறைய திறமைகளை தனக்குள் வச்சிருந்திருக்கிறார்.
அந்த விஷயம் நடிகர்கள் மட்டுமில்லாம ரசிகர்கள் நிறைய பேருக்கு தெரியாது. நடிகர் விவேக் அவர்கள் சிறந்த பரத நாட்டிய கலைஞராக இருந்திருக்கிறார். சிறு வயதிலேயே முறையாக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு அரங்கேற்றங்களை செய்திருக்கிறார். இசையில் இளையராஜா போல வருவார் என அவர் வீட்டில் நினைச்சிருக்காங்க. காரணம் அவருக்கு இசையில் அந்த அளவுக்கு ஞானம் இருந்திருக்கு. நன்றாக பாடுவதோடு மட்டுமில்லாம ஹார்மோனியம் கூட வாசிப்பாராம். அதோடு அணைத்து இசைக்கருவிகளையும் வாசிக்க கூடிய திறமையான கலைஞராக வளம் வந்திருக்கிறார்.
இறப்பதற்கு முன்னால் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புல் புல்தாரா வாசிச்சு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். சிறு வயதிலேயே பார்த்தோமானால் அவருக்கு தானே கதை எழுதி அதை தானே இயக்கக்கூடிய திறமை அவருக்கு இருந்திருக்கு. அதுதான் ஒரு கால கட்டத்துல கே பாலச்சந்தர் அவர்களை சந்திக்க வச்சிருக்கு. ஒரு விழாவில் இவருடைய மிமிக்கிரி, பேச்சு, நடனத் திறமையையும் பார்த்து வி யந்து போன கே. பாலச்சந்தர் அவர்கள் விவேக் அவர்களை கூட்டி கொண்டு போய் மனதில் உறுதி வேண்டும் அப்படின்ற படத்தின் மூலம் இவரை சினிமா திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்.
அன்று ஆரம்பித்த இவருடைய சினிமா வாழ்க்கையின் பயணமானது பல தலைமுறைகளை தாண்டி பல நகைச்சுவை படங்களின் மூலம் பலரை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். அப்படி பலரையும் சந்தோசப்படுத்தின நடிகர் விவேக் அவர்கள் இன்று நம்முடன் இ ல்லையென்றாலும் அவரின் காமெடிகள் மூலமாகவும், அவர் நட்டு வைத்த மரங்களின் மூலமாகவும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். நடிகர் விவேக் ஒரு கா மெடி நடிகராக மட்டுமி ல் லாமல் தனக்குள் இவ்வளவு திறமை உடைய மனிதராக இருந்திருக்கிறாரா என்று அவரது ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.