உதய சந்திரிகா, அவரது திரை/மேடைப் பெயரான ராதா ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் ஒரு சில மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் கூடுதலாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுகிறார். சுமார் ஒரு தசாப்த காலம் திரைப்படத்துறையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்; 1981 முதல் 1991 வரை (80களின் சகாப்தத்தில் ஆதிக்கம் செலுத்தியது). அம்பிகா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக முழு தென்னிந்தியத் திரைப்படத் துறையிலும் பல தொலைத்தொடர்களிலும் நடித்துள்ளார்.
1978 முதல் 1989 வரை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். நடிகைகள் ராதா மற்றும் அம்பிகா இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவரும் அப்பா மகன் என இருவருடனும் ஜோடியாக நடித்துள்ளனர். நடிகை ராதா சிவாஜி கணேசனுடன் முதல் மரியாதை படத்திலும் அவரது மகனான பிரபுவுடன் அண்ணாநகர் முதல் தெரு படத்திலும் நடித்துள்ளார். இவரது தங்கையான அம்பிகா சிவாஜி கணேசனுடன் வாழ்க்கை என்ற படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் இவர் நடித்த போது அம்பிகாவிற்கு வயது 22 சிவாஜி கணேசனுக்கு 56. இத்தானில் 24 வயது குறைவான நடிகையுடன் எப்படி நடிக்கலாம் என்ற சர்ச்சைகள் கிளம்பியது. அம்பிகா வெள்ளைரோஜா படத்தில் சிவாஜி கணேசனின் மகனான நடிகர் பிரபுவுடன் சேர்ந்து நடித்தார். இவர்கள் அனைவரும் நடித்து எல்லா படங்களிலுமே ஹிட் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.