தொழில்ரீதியாக ஹரிப்ரியா என்று அழைக்கப்படும் ஸ்ருதி சந்திரசேனா, ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கூடுதலாக கன்னட படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். கனகவேல் காக்கா, மற்றும் பூமிகா சாவ்லாவின் முதல் தயாரிப்பான தகிட தகிட, ஆகிய படங்களில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளிலும் நுழைந்தார்.
வசிஷ்ட என். சிம்ஹா ஒரு இந்திய நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார், இவர் முதன்மையாக கன்னடத் திரைப்படங்களில் தோன்றுகிறார். K.G.F படத்தில் கமல் என்ற வில்லன் கதாபாத்திரம் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர். இந்நிலையில் பிரபல நடிகை ஹரிப்பிரியா KGF நடிகர் வசிஷ்ட சிம்ஹாவை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்களைஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் ஜனவரி 26-ம் தேதி மைசூரில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் வசிஷ்ட சிம்ஹா மற்றும் ஹரிப்ரியா திருமணம் நடைபெற உள்ளது. கல்யாண தேதியை எம்பி பிரதாப் சிம்ஹா தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். மைசூரில் உள்ள சச்சிதானந்தா ஆசிரமத்திற்கு சென்று இருவரும் ஆகியோர் சச்சிதானந்த சுவாமிகளிடம் ஆசி பெற்றுள்ளனர்.