தற்போது இருக்கும் சினிமா உலகில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டவர் நடிகர் அரவிந்த்சாமி. சூப்பர் ஸ்டாரின் தளபதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் இதுவரை ஏராளமான திரைபடங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் 90s களின் ஆணழகன் என்றால் அது நடிகர் அரவிந்த்சாமி மற்றும் அஜித் ஆகிய இருவரும் தான். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகர் அஜித் மற்றும் அரவிந்த்சாமி இவர்கள் இருவரும் தற்போது சினிமா வாழ்க்கையில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த அரவிந்த்சாமி நீண்ட இடைவேளைக்கு பிறகு தனி ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் பெண்களின் மனதைக் க வ ர் ந்த இந்த இரண்டு நட்சத்திரங்கள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஹீரோவாக நடித்த நடிகர் அரவிந்த்சாமி, தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் வி ல் ல னாக நடித்து அ சத்தி வருகிறார்.
அவர் நடித்த தனி ஒருவன், போகன் போன்ற படங்கள் செம ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளாராம். அதுவும் நடிகர் அஜித்துக்கு வி ல் ல னாக நடிக்க உள்ளாராம். சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி, ரகுவரன் ஆகியோர் நடித்த திரைப்படம் பாசமலர்கள். இந்த திரைப்படத்தில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த கூட்டணி சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக இணைகிறது. விக்னேஷ் சிவன் அஜித்துக்காக செம்ம மா ஸான ஒரு கதையை தயார் செய்து இருக்கிறார்.
அஜித் போன்ற கிளாஸ் நாயகனுக்கு வி ல் லனாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு அரவிந்த்சாமி தான் சரியான நபராக இருப்பார். நடிகர் அஜித்தும் நடிகர் அரவிந்த்சாமியும் ஒரு காலத்தில் ஒன்றாக நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி சுமார் 29 வருடங்கள் ஆகி உள்ளது. இதே போன்று இந்த படத்தில் மேலும் முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். வீரம் படத்திற்குப் பிறகு அஜித் உடன் நடிகர் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக படங்களை செய்து வரும் நிலையில் திடீரென்று அஜித் படத்தில் இணைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகர் அஜித்துக்கு புதிய படத்தில் வாய்ப்பு கொடுத்து இருக்கும் இயக்குனர் யார் என்றால் அது இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். ஆனால் இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதற்கு மிகவும் அதிக வாய்ப்பு உள்ளது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்க உள்ளது. ஏ கே 62 படத்தை தீபாவளிக்கு வெளியிட அஜித் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.