தமிழ் சினிமாவில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகியவர் தான் ஜோதிகா. சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த ஜோதிகா திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.
படங்களில் பிஸியாக நடித்து வந்த காலத்தில் நடிகர் சூர்யாவைக் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். பின் 36 வயதிலினிலே எனும் படத்தில் கதையின் நாயகியாக நடித்து கம் பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா அடுத்ததாக காதல் எனும் மலையாள படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஜோதிகா அளித்திருந்த பேட்டி ஒன்றில், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகிய முன்னணி நட்சத்திரங்களுக்கு சவால் விடும் விஷயம் ஒன்றை கூறினார். யாராலும் ரஜினி சார் மாதிரி ஒரு பொண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்திரமுகி மாதிரியான படத்தை தேர்வு செய்து முன்னணி நடிகர்கள் நடிக்க வேண்டும். ஆனால் ரஜினி சார் சந்திரமுகி படத்தில அதை பண்ணினாரு. அப்போது தான் தெரியும் அவர்களுடைய கான்ஃபிடென்ஸ் என்னவென்று தெரியும் என கூறியுள்ளார் ஜோதிகா. இவங்க யாராவது அவரை மாதிரி பண்ணினால் அவங்களும் சிறந்த நடிகர்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் எனக் கூறியதை இங்கே காணலாம்.
View this post on Instagram