சீரியலில் கிராமத்து நடிகையாக நடித்த செந்தில்குமாரியா இது? 40 வயதில் மார்டன் டிரஸில் எப்படி இருக்கிறார் கொஞ்சம் நீங்களே பாருங்க…

General News Image News

செந்தில்குமாரி என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது சினிமா துறையில் ஏராளமான நடிகைகள் வந்துள்ளனர். அவர்களின் மத்தியில் முண்ணனி நடிகைகள் பலருமே தங்களுடைய வாழ்க்கையில் துணை நடிகைகளாகவே நடித்து வருவது வழக்கமாகவே உள்ளது. முக்கியமாக சினிமாவிலும் நடித்து, சின்னத்திரையிலும் நடித்து வரும் நடிகைகள் தான் தற்போது அதிகமாக உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் பிரபலமானவர் தான் நடிகை செந்தில்குமாரி என்பவர்.

நடிகை செந்தில்குமாரி தமிழ் சினிமாவில் பசங்க என்ற படத்தின் மூலமாக தான் அறிமுகமானார். பசங்க படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் பிரபலமானவர் நடிகை செந்தில் குமாரி. அதன் பிறகு தோரணை, பீசா போன்ற 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலக்கியிருக்கிறார். முக்கியமாக நடிகை செந்தில்குமாரியின் தங்கை ஒரு பிரபலமான நடிகை ஆவார், அவர் பெயர் மீனாள் ஆவார். இவருடைய கணவரின் நண்பர் தான் இயக்குனர் ராம். அதற்குப் பிறகு இயக்குனர் ராம் படத்தில் இவர் சிறிய  கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இது நாள் வரைக்கும் நடிகை செந்தில்குமாரி தமிழ் சினிமாவில் துணை நடிகையாக மட்டும் நடிக்காமல் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாகாவும் நடித்துள்ளார். மேலும் இதனை தொடர்ந்து நடிகை செந்தில்குமாரி நடிகர் காரத்தில் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு அக்காவாக நடித்து தமிழ் மக்களிடையே மீண்டும் ஒரு நல்ல நடிகை என்ற வரவேற்பை பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரையிலும் சிறப்பாக நடித்து வருகிறார் சரவணன் மீனாட்சி சீரியலில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும் கதாபத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

எப்போதுமே முன்னணி நடிகைகளாக இருந்தாலும், அறிமுக நடிகைகளாக இருந்தாலும் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும் போது கிராமத்து பெண்ணாக தான் நடிக்கிறார்கள். ஆனால் அவர்களது நிஜ வாழ்க்கையில் பார்த்தால் பக்கவான மாடர்ன் நடிகைபோல டிரஸ் அணிந்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை செந்தில்குமாரி கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பக்காவான மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வயசு ஆனாலும் அழகு குறையலையேனு ஒரு சிலரை பார்த்தால் மட்டும் தான் சொல்லத் தோணும்.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் மாமியாராக நடித்த செந்தில்குமாரியும் இருக்கிறார். ஆனால் தற்போது வரை இவர் தன்னுடைய சின்னத்திரை வாழ்க்கையில் பல தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான நடிகையாகவே அறியப்பட்டுள்ளார். இவர் சீரியலில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் தன்னுடைய அழகான தமிழ் உச்சரிப்பால் கிராமத்து வாசத்தை காட்டி வருகிறார். வீட்டில் நடிப்பதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் ஒவ்வொரு இடத்திலும் போ ரா டி அதன் பிறகு தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கிறார். சீரியல்களில் பார்ப்பதற்கு வயதான கேரக்டரில் நடித்து வந்தாலும் நிஜத்தில் இவரது அழகே அழகுதான்.

இப்போது நடிகை செந்திகுமாரி சின்னத்திரை தொடரில் அம்மாவாக நடித்து வந்ததால் பலருமே பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுவும் கதாநாயகிகளுக்கு போட்டியாக இவர் கலக்கலாக மாடர்ன் உடையில் களமிறங்கி இருப்பதைப் பார்த்து இது தான் மார்டன் அம்மாவா என்றும் சிலர் கலாய்த்து தள்ளினாலும் வேற லெவல் தான் நீங்க என்று இவருடைய திறமைக்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஆனாலும் சில குறும்பர்கள் ஐ லவ் யுவர் வாய்ஸ் என்றும் அழகான சிண்ட்ரெல்லா நீங்கதான் என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *