இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘லாக்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட் , சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வட சென்னை வாழ்வியலைப் பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். ‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் தான் இயக்குனர் பாக்கியராஜ். அந்த வகையில் இவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி மற்றும் தூறல் நின்னு போச்சு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இவர் தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார். இப்படி ஒரு நிலையில் இவர் இயக்கிய எல்லா படத்திலும் முருங்கைக்காய் மையக் கருத்தாக இருந்து வரும். அதில் என்னவோ ரகசியம் இருக்கும் என்று ஏராளமான ரசிகர்கள் பல வருடங்களாக அதற்கான விடை தெரியாமல் இருந்து வந்துள்ளார்கள்.
இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால் . எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. இப்படி ஒரு நிலையில் லாக் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். பல ஆண்டுகள் கடந்தும் என் படத்தில் வந்த முருங்கைக்காய் கதையை பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேசி கொண்டிருக்கின்றார்கள். அதை நினைத்தால் எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. நான் என் திரைப்படத்தில் வைப்பதற்கு காரணம் என்னுடைய பாட்டி தான்.
அவர் எங்களுக்கு உணவு பரிமாறும் பொழுது எனக்கு முருங்கைக்காய் துண்டுகள் கு றைவாகத்தான் வைப்பார்கள். ஆனால், என்னுடைய சாப்பிடும் என் மாமாவுக்கு நிறைய வைப்பார்கள். நான் என் பாட்டியிடம் கேட்டால் உனக்கு இது போதும் என்று சொல்லித் திட்டுவார். ஆனால், என் மாமாவுக்கு மட்டும் அதிகமாக வைத்துக் கொண்டே இருப்பார்கள். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் ச ந் தேகத்தைக் கேட்ட போது தான் அதன் அர்த்தம் புரிந்தது.
அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவி ல் லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆனால், அது மக்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பு பெரும் என்று தெரியவி ல் லை என்று அவர் அந்த இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்…