முன்பதிவில் முதலிடம் பிடித்த படம் எது…? துணிவா…? வாரிசா…? அ தி ர டியாக வெளியான தகவல்…!! குஷியில் ரசிகர்கள்…!!

Cinema News

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக விளங்கும் அஜித் விஜய் நடிப்பில் இன்றைய தினம் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இப்படங்களின் வெளியூட்டை முன்னிட்டு ரசிகர்கள் நேற்றைய தினமே கொண்டாட ஆரம்பித்து விட்டனர். காலம் காலமாக அஜித் விஜய்க்கான போட்டி இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த மோதல்களில் விஜய் கை ஓங்கி இருந்தாலும் கூட கடந்த சில வருடங்களாக அஜித்தின் கை ஓங்கி வருகிறது. இன்னும் இந்த போட்டி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகின.

இரு படங்களின் FDFS காட்சிகள் எல்லாம் சூப்பராக முடிந்துவிட்டது, ரசிகர்களும் படத்தை பார்த்த பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர்.இரண்டு படங்களுக்கும் செம மாஸான ப்ரீ புக்கிங் நடந்துள்ளது. அஜித்தின் துணிவு திரைப்படம் பணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தாலும், அதே சமயம் இந்த படத்தில் சில சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்சை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.  இன்னொரு பக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையைக் கொண்ட திரைப்படமாக உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் படத்தை பார்க்க பல சினிமா பிரபலங்களும் வந்த வண்ணமே இருக்கின்றனர்.  முதல் நாள் வசூலில் யார் கை ஓங்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே முன்பதிவில் யார் கை ஓங்கி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே முன் பதிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் தான் ஓங்கி இருந்தது. கடைசியிலும் அதே ரிசல்ட் தான் துணிவு தான் அதிகமாக முன்பதிவு செய்து வெற்றி பெற்றிருக்கிறது.

பல்வேறு இடங்களில் துணிவு திரைப்படம் தடை விதிக்கப்பட்டபோதிலும் முன்பதிவில் துணிவு நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. அதன்படி ப்ரீ புக்கிங் விவரத்தை வைத்து பார்க்கும் போது அஜித்தின் துணிவு ரூ. 12 கோடியும், விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 10 கோடியும் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர் இதே போல முதல் நாள் வசூலும் அஜித்தின் துணிவு கை ஓங்கும் என எ தி ர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *