ஆர். ஜே. பாலாஜியின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா...!! அட இவரின் மனைவி ஒரு பிரபலமா...? வெளியான குடும்ப பு கைப்படம்...!!

ஆர். ஜே. பாலாஜியின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா…!! அட இவரின் மனைவி ஒரு பிரபலமா…? வெளியான குடும்ப பு கைப்படம்…!!

General News Image News

ஆர்.ஜே.பாலாஜி சென்னையை சேர்ந்த ஒரு வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். ஆர்.ஜே.பாலாஜியின் குடும்பம் அவரது தந்தையால் கை வி டப்பட்டது. அதன் பின்னர் அவரது அம்மா தான் தனி ஆளாக இருந்து ஆர்.ஜே.பாலாஜியை வளர்த்து ஆளாக்கினார். பள்ளியில் படித்த காலத்தில் ஆர்.ஜே.பாலாஜி 19 பகுதிகளில் 27 வீடுகள் மாறியுள்ளதாகவும், 10 பள்ளிகளில் படித்துள்ளதாகவும் அவரே தனது முகநூல் பக்கத்தில் ஒருமுறை தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பில் தோ ல் வியடைந்த ஆர். ஜே. பாலாஜி, பின்னர் தனித்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார். அத்தோடு நி று த்திக் கொள்ளாத ஆர்.ஜே.பாலாஜி கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக ஆர்.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கினார்.

இவர் பிக் எப்.எம் 92.7ல் ஒலிபரப்பான டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் (தற்போது இல்லை) போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மக்களால் பெரிதும் அறியப்படுகிறார். ரோடியோவில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வயிறு கு லுங்க சிரிக்க வைத்த ஆர்.ஜே.பாலாஜி, இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். ஹலோ கோயம்புத்தூர்” என்ற பெயரில் ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பட்டையக் கிளப்பியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்தார்.

சென்னையில் உள்ள பிக் எஃப். எம் மில் வேலைக்கு சேர்ந்த ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய கிராஸ் டாக் என்ற நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தெரியாத ஒருவருக்கு போன் செய்து அவரை க லா ய்க்க கூடிய அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி செம்ம சூப்பராக தொகுத்து வழங்கினார். பெயரும் புகழும் மட்டும்  கிடைத்தால் போதும் என்று நினைப்பவர் அவர் கிடையாது. கொஞ்சம் சமூக சிந்தனையும் கொண்டவர். லண்டனில் “க்ராஸ் டாக்” நிகழ்ச்சியால் ஒருவர் தற் கொ லை செய்து கொள்ள, உடனடியாக அந்த மாதிரி ஷோவை இனி செய்ய மாட்டேன் என கைவி ட் டார்.

ஆர்.ஜே வாக பிரபலமான பாலாஜி அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக காலெடி எடுத்து வைத்தார். நகைச்சுவை நடிகராகி அதன் பின் ஹீரோவாக அ வ தாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எல்கேஜி படம் மூலமாக கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் பயணித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது மட்டுமின்றி இயக்கியும் இருந்தார் பாலாஜி. இதன் பின், சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷம் படத்தையும் இயக்கி இவரே அதில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *